Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இன்றைய செய்திகள்: 15 ஜனவரி 2026 வியாழக்கிழமை
15/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 15/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
பொறியியல் முதல் விவசாயம் வரை - ஒரு வெற்றிக் கதை!
14/01/2026 Duration: 14minதமிழ்நாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டம் கோட்டப்பூண்டி கிராமத்தில் இயற்கை விவசாயத்திலும் மரச்செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்பவர் 'உழவர்' சதீஷ். பொறியில்துறையில் படித்துவிட்டு தற்போது வெற்றிகரமான இயற்கை விவசாயியாகத் திகழும் உழவர் சதீஷை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எந்த இடம்?
14/01/2026 Duration: 02min2026 ஆம் ஆண்டுக்கான உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
Thai Pongal, Down Under: Traditions through young eyes - வேர் தேடும் பயணம்: ஆஸ்திரேலிய இளைய தலைமுறையின் பார்வையில் தைப்பொங்கல்
14/01/2026 Duration: 22minThai Pongal is more than a harvest festival - it is a celebration of gratitude, community spirit and the deep bond between people and nature in Tamil culture. The spirit of this traditional thanksgiving festival is shared with a contemporary perspective by a younger generation of Tamils born and raised in Australia. They reflect on what Thai Pongal means in a multicultural world - how traditions are remembered, transformed and sometimes reimagined by their ancestors back home. - தைப் பொங்கல் என்பது அறுவடைத் திருநாளை விட மேலானது - இது நன்றியுணர்வு, சமூக உணர்வு மற்றும் தமிழ் கலாச்சாரத்தில் மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பைக் கொண்டாடும் ஒரு விழா. இந்த பாரம்பரிய நன்றி செலுத்தும் விழாவின் உணர்வை சமகாலக் கண்ணோட்டத்தில் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இளைய தமிழ்த் தலைமுறையினர் பகிர்கிறார்கள். பன்முக கலாச்சார உலகில் தைப்பொங்கல் என்றால் என்ன - மரபுகள் எவ்வாறு நினைவுகூரப்படுகின்றன, மாற்றியமைக்கப்படுகின்றன, சில சமயங்களில் தாயகத்திலிருந்த தங்கள் மூதாதையர் கடைப்பிடித்தவற்றைத் தாம் எப்படி மறுகற்பனை செய்துள்
-
செய்தியின் பின்னணி : 2035ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா எப்படி இருக்கும்?
14/01/2026 Duration: 09minஅரசு கடந்த வாரம் '2025 மக்கள் தொகை அறிக்கையை' வெளியிட்டது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள முக்கிய விடயங்களைத் தொகுத்துத் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஈரானில் மாபெரும் மக்கள் போராட்டம். ஏன்? இனி என்ன நடக்கலாம்?
14/01/2026 Duration: 11minஈரான் நாடு 1979 இல் இஸ்லாமிய குடியரசாக மாறிய பின்னர் ஈரான் சந்திக்கும் மிகப் பெரிய போராட்டம் அங்கு நடந்துகொண்டுள்ளது. இதற்கான காரணங்களையும், இனி என்ன நடக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் முன்வைக்கும் கருத்துக்களையும் தொகுத்து முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 14 ஜனவரி 2026, புதன்கிழமை.
14/01/2026 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 14/01/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: கல்விச் சீர்திருத்த எதிர்ப்பினால் அரசு பின்வாங்குகிறதா?
13/01/2026 Duration: 08minபுதிய கல்விச் சீர்திருத்தத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக கூறி எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதனை அடுத்து சில செயற்பாடுகளை அரசு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
50 ஆண்டுகள் கடந்தும் தீராத வழக்கு – தகவல் தந்தால் 1 மில்லியன் பரிசு
13/01/2026 Duration: 02min50 ஆண்டுகளுக்கு முன் மர்மமாக காணாமற்போன சிறுமி Eloise Worledge தொடர்பான தகவல்களுக்கு விக்டோரியா காவல்துறை இன்று 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
2026 ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை கணிப்பு : எங்கு வீட்டு விலை அதிகரிக்கும்?
13/01/2026 Duration: 03min2026-இல் ஆஸ்திரேலிய வீட்டுச் சந்தை முன்கணிப்பு நிலவரங்கள், வீட்டு விலை அதிகரிப்பிலும், வாடகை நிலைகளிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புகளை காட்டுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 13 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை
13/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 13/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
கோரப்படாத பல கோடி டாலர்கள் : உங்கள் பங்கு உள்ளதா?
12/01/2026 Duration: 03minஆஸ்திரேலியாவில் பல கோடி டாலர்கள் கோரப்படாத மறக்கப்பட்ட பணமாக உரிமையாளர்களுக்காக காத்திருக்கின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
சிட்னியில் தமிழர் திருநாள் பொங்கல் விழா!
12/01/2026 Duration: 08minசிட்னியில் Merrylands எனுமிடத்தில் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 8 மணிவரை நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழா குறித்து பல தமிழர் அமைப்புகளின் ஒருங்கிணைந்த சிட்னி பொங்கல் ஏற்பாட்டுக்குழு சார்பாக சிட்னி தமிழ்மன்றம் சார்பில் முத்தரசு அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கணேசன் அவர்களும் உரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி : Bondi பயங்கரவாத தாக்குதல் குறித்து ராயல் கமிஷன் விசாரணை அறிவிப்பு!
12/01/2026 Duration: 08minBondi கடற்கரை பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்ய ராயல் கமிஷன் அமைக்கப்படுவதாக கடந்த வாரம் பிரதமர் Anthony Albanese அறிவித்தார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 12 ஜனவரி 2026 - திங்கட்கிழமை
12/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 12/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு
11/01/2026 Duration: 09minதமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது பாட்டாளி மக்கள் கட்சி; பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வந்த விஜயின் 'ஜனநாயகன்' படம் திரைக்கு வருவதில் தடை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
‘அதிகாரம் யார் கையில் உள்ளதோ அவர்கள் பக்கம் எழுத்தாளர்கள் சாயும் சூழல் உருவாகியுள்ளது’ - தீட்சண்யா
11/01/2026 Duration: 13minகவிதை, கட்டுரை, மேடைப்பேச்சு எனப் பல்வேறு தளங்களில் சமூக அவலங்கள் குறித்த தனது பார்வைகளை முன்வைத்து வருபவர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. எழுத்திற்கு அப்பால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். கருத்துரிமை, எழுத்துச்சூழல், தமிழகத்தில் நிலவும் சமூகப்போக்கு பற்றிய கேள்விகளுடன் அவரைச் சந்தித்து உரையாடியவர் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 ஜனவரி 2026)
10/01/2026 Duration: 08minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (4 – 10 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி: Ashes 2025/26 – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெற்றிக் கதை!
09/01/2026 Duration: 09minAshes 2025/26 தொடர், வெறும் Test போட்டிகளின் வரிசையாக அல்லாமல், Test cricket-ன் உண்மையான ஆன்மாவை முழுமையாக வெளிப்படுத்திய ஒரு நீண்ட கிரிக்கெட் காவியமாக அமைந்து முடிந்துள்ளது. Australia-வின் தொடர்ச்சியான ஆதிக்கம், England-ன் உறுதியான எதிர்ப்பு, மற்றும் பிரியாவிடைத் தருணங்கள் என இந்த ஐந்து Test போட்டிகளின் பயணம் ஓர் ஆழமான போராட்டமாக கிரிக்கெட் வரலாற்றில் பதியப்பட்டது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 09 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை
09/01/2026 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 09/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.