Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
பெர்த்தில் விளையும் மாம்பழம் ஒன்றின் எடை ஒரு கிலோ!
20/01/2026 Duration: 02minமேற்கு ஆஸ்திரேலியா பெர்த்தில் இந்த ஆண்டு மாம்பழங்கள் விளைச்சல் சாதனை அளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
தினமும் 6 லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பில்லியனர்கள்!
20/01/2026 Duration: 03minஆஸ்திரேலிய பில்லியனர்களின் செல்வம் கடந்த வருடம் அசாதாரண வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 20 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை
20/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 20/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இந்த ஒரு தவறால் பலர் அதிக மின்சார கட்டணம் செலுத்தக்கூடும்!
19/01/2026 Duration: 02minஆஸ்திரேலியாவில் பலர் அறியாமல் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை மின்சார கட்டணமாக கூடுதலாக செலுத்தி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இலவச நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை பெறுவது எப்படி?
19/01/2026 Duration: 11minதேசிய நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை திட்டம் என்றால் என்ன? அதன் நோக்கம் மற்றும் இந்த பரிசோதனைக்கு யார் தகுதியானவர்கள்? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் சிட்னியில் குடும்ப மருத்துவராக பணியாற்றும் Dr ராஜேஷ் கண்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
-
கடும் சூடான நாட்களில், நம் சொந்தங்கள், சொத்துகள், மற்றும் செல்லப்பிராணிகளை எப்படிப் பாதுகாப்பது?
19/01/2026 Duration: 12minஅண்மைக் காலமாக, நம் நாட்டில் கடும் வெப்பநிலை கொண்ட நாட்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. உயர்ந்து வரும் வெப்பம் தணிய முன்பைவிட நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதும், அதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதும் நம்மால் உணர முடிகிறது. இதனுடன் சேர்ந்து, காட்டுத்தீ அபாயமும் கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், கடும் வெயிலும் காட்டுத்தீ அபாயமும் நிலவும் நாட்களில், நம் சொந்தங்களையும், சொத்துகளையும், செல்லப்பிராணிகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த முக்கியமான தகவல்களை, தன்னார்வ தீயணைப்புப் படைவீரராகச் செயல்பட்டு வரும் கார்த்திக் தணிகைமணி அவர்களிடம் கேட்டறிகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலியாவின் இந்த பெருநகரில் மட்டும் வீட்டு வாடகை சரிகிறது - ஏன்?
19/01/2026 Duration: 08minமெல்பனில் கடந்த 12 மாதங்களில் வீட்டு வாடகை குறைந்துள்ளது என Domain வெளியிட்டுள்ள சமீபத்தைய அறிக்கை தெரிவிக்கிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 19 ஜனவரி 2026 - திங்கட்கிழமை
18/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 19/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு
18/01/2026 Duration: 09minடெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கு; அல்பலா பல்கலைக்கழகத்தின் ரூ.140 கோடி சொத்து முடக்கம்; ஜனநாயகன் பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்; தமிழகத்தில் பெருகி வரும் கஞ்சா கலாச்சாரம் - இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (10 – 17 ஜனவரி 2026)
17/01/2026 Duration: 07minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (10 – 17 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலிய ஓபன் - 127 போட்டி முடிவுகளை சரியாக கணித்தால் நீங்களும் வெல்லலாம் 1 கோடி!
16/01/2026 Duration: 03minஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை மேலும் பரபரப்பாக்கும் நோக்கில், டென்னிஸ் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்காக 10 மில்லியன் டாலர் பரிசு போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியாவின் மாபெரும் பொங்கல் விழா!
16/01/2026 Duration: 12minவிக்டோரியா மாநிலத்தில் நடைபெறும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இருபத்தி ஏழு தமிழ் அமைப்புகள் இணைந்து மெல்பர்ன் பெருநகரில் நடத்தும் மாபெரும் பொங்கல் விழா குறித்து நம்முடன் கலந்துரையாடுகின்றனர் பொங்கல் விழா ஒருங்கிணைப்பாளர்கள் சத்யன், மது, கோபால், மற்றும் பிரதாப் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல். நடைபெறும் நாள்: ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி & இடம்: Event Central, Caribbean Park, Scoresby, Victoria 3179. அதிக தகவலுக்கு: www.tamilfestival.org.au vanakkam@tamilfestival.org.au
-
செய்தியின் பின்னணி: நாட்டின் நீரில் மூழ்கல் நெருக்கடியை எதிர்கொள்ளும் புதிய திட்டம்
16/01/2026 Duration: 06minஆஸ்திரேலியாவில் கோடைக்காலம் தொடங்கியதிலிருந்து இதுவரை 33 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு நீரில் மூழ்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் Australian Water Safety Council, “Australian Water Safety Strategy 2030” என்ற திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 16 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை
16/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
15/01/2026 Duration: 08minஇலங்கையில் அதிபர் தலைமையில் யாழில் பொங்கல் விழா; திருகோணமலையில் சட்டத்தை மீறி புத்தர் சிலை அமைத்த விவகாரத்தில் நான்கு பௌத்த பிக்குகள் ஒன்பது பேருக்கு விளக்கமறியல் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
பூச்சி பிடிக்க கொண்டுவரப்பட்ட இந்திய மைனா எமனான கதை!
15/01/2026 Duration: 09minஆஸ்திரேலியாவில் Common Myna என்று அழைக்கப்படும் இந்திய மைனா ஏன் கொண்டுவரப்பட்டது, அது எப்படி பூர்வீக பறவைகளின் எமனாக மாறியது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
15/01/2026 Duration: 06minகாசா போர் நிறுத்தத்தின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை; ஈரான் பதற்றம்; கிரீன்லாந்துக்கு உரிமை கொண்டாடும் அமெரிக்கா; சிரியாவில் ராணுவத்திற்கும் குர்து படைக்கும் இடையே மோதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
75 நாடுகளுக்கு அமெரிக்கா குடிவரவு விசா தடை - சுற்றுலா விசாவிலும் கெடுபிடி
15/01/2026 Duration: 06min75 நாடுகளுக்கான குடிவரவு விசா விண்ணப்பங்களின் செயலாக்கத்தை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதோடு சுற்றுலா விசாவிற்கும் கடுமையான விதிமுறைகளையும் அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
சிட்னி Pendlehill நகரில் மாபெரும் தமிழர் திருநாள்!
15/01/2026 Duration: 09minசிட்னி பெருநகரின் Pendlehill எனுமிடத்தில் சிட்னி தமிழ வர்த்தகர்களும், தமிழ் அமைப்புகளும் இணைந்து நடத்தும் பொங்கல் விழா ஜனவரி மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. இந்த பொங்கல் விழா குறித்து ரிஷி மற்றும் ஜீவா ரத்னம் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.
-
திருவள்ளுவரின் பிறந்த நாளும் தமிழ்ப் புத்தாண்டும்
15/01/2026 Duration: 13minதமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி, உலகமே போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் 2057வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் தமிழ் ஆர்வலர், ஆய்வாளர், பல ஆய்வுக் கட்டுரைகளையும், இரண்டு நூல்களையும் எழுதியுள்ள முருகேசு பாக்கியநாதன் அவர்களைது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன். [இது ஒரு மறு ஒலிபரப்பு.]