Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
இன்றைய செய்திகள்: 04 பெப்ரவரி 2026 - புதன்கிழமை
03/02/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கை: கிவுல் ஓயா நதி நீர் திட்டத்திற்கு எதிராக போராட்டம்
03/02/2026 Duration: 08minவடக்கின் நீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசு முன்வைத்துள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
நாட்டில் வட்டி வீதம் உயர்ந்தது - RBA அறிவிப்பு!
03/02/2026 Duration: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
How to cater for your dietary restrictions - உணவுக் கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளுவது எப்படி? இதோ சில வழிமுறைகள்!
03/02/2026 Duration: 10minAustralia is known as the allergy capital of the world. Our diverse population also means that we express our religious beliefs, ethics, health and personal choices through the food we eat. We called on some experts to help us navigate all the labelling, certifications and resources that can inform our food choices. - பல்லின பல்கலாசார நாடான ஆஸ்திரேலியாவில் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பின்னணியில் உணவுக் கட்டுப்பாடுகளை எவ்வாறு கவனத்தில் கொள்ளுவது என்பது குறித்து ஆங்கிலத்தில் Melissa Compagnoni எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 03 பெப்ரவரி 2026 - செவ்வாய்க்கிழமை
03/02/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/02/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஆஸ்திரேலிய மகத்தான மனிதரின் 75 ஆண்டுகால தொப்பி 4.6 லட்சம் டாலருக்கு விற்பனை!
02/02/2026 Duration: 03minஆஸ்திரேலிய கிரிக்கெட் விளையாட்டின் மகத்தான மனிதர் Sir Donald Bradman 75 ஆண்டுகளுக்கு முன்னர் அணிந்திருந்த ‘Baggy green’ தொப்பி ஏலத்தில் பல லட்சம் டாலர்களுக்கு விற்பனையாகி உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
பெர்த்தில் இரு மகன்களை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை?
02/02/2026 Duration: 03minபெர்த்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: கங்காரு தீவின் சிறப்புகள் தெரியுமா?
02/02/2026 Duration: 11minஆஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப் பெரிய தீவு கங்காரு தீவு (Kangaroo Island). இந்த தீவின் பூர்வீக வரலாற்றையும், சமீபத்தில் நடந்த நிகழ்வுகளையும், அங்குச் சென்றால் என்னென்ன சுவையான அம்சங்களையெல்லாம் பார்க்கலாம், அனுபவிக்கலாம் என்ற தகவல்களை தருகிறார் உயிர்மெய்யார்.
-
செய்தியின் பின்னணி: மருந்துகளை தவறாக பயன்பபடுத்துகின்றீர்களா? அரசின் கண்காணிப்பு திட்டம் அறிமுகம்!
02/02/2026 Duration: 08minமருந்து பயன்பாட்டில் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய சீர்திருத்த திட்டங்களை கடந்த வாரம் பெடரல் அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 02 பெப்ரவரி 2026 - திங்கட்கிழமை
01/02/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 02/02/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
01/02/2026 Duration: 09minவிண்ணை தொட்ட தங்கம்-வெள்ளி விலையில் வீழ்ச்சி; பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய நிதிநிலை அறிக்கை; சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம் - தவெக யாருடன் கூட்டணி? உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகள்; 98 வயது புவனேஸ்வரி பகிரும் ஆரோக்கிய ரகசியம்!
01/02/2026 Duration: 12minஇந்தியாவிலிருந்து 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த புவனேஸ்வரி வெங்கடராமன் அவர்களுக்கு தற்போது 98 வயதாகும் நிலையில், அவர் தனது அற்புதமான வாழ்க்கைப் பயணத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். மேலும், ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் நீண்ட காலம் வாழ உதவிய தனது தனிப்பட்ட உடல்நல பழக்கங்கள் மற்றும் ரகசியங்களையும் அவர் பகிர்கிறார். அவரை நேர்கண்டு உரையாடுகிறார் செல்வி.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (25 – 31 ஜனவரி 2026)
31/01/2026 Duration: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (25 – 31 ஜனவரி 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
சிறு வணிகங்களுக்கு தேவையான AI கல்வியை இலவசமாக தருவதாக NSW அரசு அறிவிப்பு!
30/01/2026 Duration: 02minNSW அரசு சிறு வணிகங்களுக்கு இலவச செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சிகளை வழங்குகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
விக்டோரியாவில்/மெல்பனில் போலி நோட்டுகள் புழக்கம்: எச்சரிக்கும் காவல்துறை
30/01/2026 Duration: 02minவிக்டோரியா மாநிலத்தில் உயர்தர போலி நோட்டுகள் பரவி வருவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பணப்பரிவர்த்தனை செய்யும்படி விக்டோரியா மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 30 ஜனவரி 2026 - வெள்ளிக்கிழமை
30/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 30/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
மீண்டும் நிபா வைரஸ்! இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆபத்து உலகம் முழுவதும் பரவுமா?
29/01/2026 Duration: 09minஇந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு பேருக்கு, கொடிய நிபா (Nipah) வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் குறைந்தது 190 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசி அல்லது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை இல்லாத இந்த தொற்று பரவுவதைத் தடுக்க, ஆசியாவின் பல நாடுகள் விமான நிலையங்களில் வைத்தே பரிசோதனைகள் செய்யத் தொடங்கியுள்ளன. அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட ஆபத்தான வைரஸ் என்றாலும், இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து, Angelica Waite எழுதிய விவரணத்தை அடிப்படையாகக் கொண்டு, நிபா வைரஸ் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
SBS தமிழ் ஒலிபரப்பில் Casual நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்ற வாய்ப்பு!
29/01/2026 Duration: 01minசிட்னி அல்லது மெல்பன் நகரில் Casual அடிப்படையில் SBS தமிழ் ஒலிபரப்பில் பணியாற்ற விரும்புகின்றவர்களின் விண்ணப்பங்களை SBS வரவேற்கிறது.
-
SBS On Demandயின் தற்போதைய பிரபலமான நிகழச்சிகள்!
29/01/2026 Duration: 10minSBS On Demand என்பது SBS வழங்கும் காணொளிகளை இலவசமாக stream செய்யும் ஒரு சேவை. இந்த சேவையில் தற்போது பிரபலமாக பார்க்கப்படும் சில நிகழச்சிகளை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
-
NSW ஆற்றில் மூழ்கி இந்தியர் இருவர் மரணம் - கர்ப்பிணி மனைவி கண்முன் நடந்த துயரம்
29/01/2026 Duration: 02minNSW ஆற்றில் நீந்த முயன்ற இந்தியர் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு – கர்ப்பிணி மனைவி கண்முன்னே நடந்த சோகம். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.