Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 195:46:45
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இலங்கை : இந்த வார முக்கிய செய்திகள்

    08/01/2026 Duration: 08min

    வெனிசுவேலா மீது அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு கொழும்பில் பல்வேறு தரப்பினரும் கண்டன ஆர்ப்பாட்டம்; அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்

  • உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

    08/01/2026 Duration: 07min

    அமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோ, கிரீன்லாந்து-அமெரிக்கா; ஈரானில் பரவும் போராட்டம்; ஏமன் விவகாரத்தில் சவுதி அரேபியா- யுஏஇ இடையே முறுகல் போக்கு உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்

  • நீங்கள் வெளிநாடு செல்லும்போது ஆஸ்திரேலிய ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி வாகனம் ஓட்டுபவரா?

    08/01/2026 Duration: 02min

    வியட்நாமுக்கு சுற்றுலாச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் அங்கு வாகனம் ஓட்டுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • உலகில் No 1 வெனிசுவேலா பெட்ரோல் வளத்திற்கு அமெரிக்கா உரிமை கொண்டாடுவது ஏன்?

    08/01/2026 Duration: 10min

    உலகின் No 1 எண்ணெய் வளம் கொண்ட நாடு வெனிசுவேலா. இந்த எண்ணெய் அமெரிக்காவுக்குச் சொந்தமானது என்று அமெரிக்க அதிபர் Trump செல்வதன் அர்த்தம் என்ன என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • துடிப்பு நின்ற இதயத்தை உங்களாலும் துடிக்க வைக்க முடியும்!!

    08/01/2026 Duration: 12min

    ஒருவரின் இதயம் ஏதாவது காரணத்தினால் திடீரென நின்று போனால் உடனே CPR செயவதினால் அதனை இயங்க வைத்து அவர் உயிரை காப்பாற்ற முடியும். CPR என்றால் என்ன? அதனை எல்லோரும் கற்க வேண்டிய அவசியம் என்ன போன்ற CPR குறித்த பல கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் Blacktown மற்றும் Westmead மருத்துவமனைகளில் Senior Emergency Specialistஆக பணியாற்றி வரும் டாக்டர் தயாமதி ஜெகநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • செய்தியின் பின்னணி: Child Care உதவி அதிகரிப்பு! வாரம் 3 நாட்கள் உத்தரவாதம்!

    08/01/2026 Duration: 10min

    ஜனவரி 5 ஆம் தேதி முதல், Child Care எனப்படும் குழந்தை பராமரிப்பு தொடர்பாக Child Care Subsidy - 3 Day Guarantee அல்லது குழந்தை பாராமரிப்புக்கு 3 நாட்கள் உத்தரவாதம் எனும் புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை SBS Newsயின் Sam Dover மற்றும் Jasmine Kassis எழுதிய விவரணத் தகவலோடு முன்வைக்கிறார் றைசெல்.

  • மற்றொரு Bondi நாயகனுக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை

    08/01/2026 Duration: 02min

    Bondi கடற்கரையில் நடந்த தாக்குதலின் போது, துப்பாக்கி ஏந்திய நபரை எதிர்கொண்ட ஒருவருக்கு ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதாக Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • கணினிப் பாவனை கண்ணுக்கு ஆபத்தா?

    08/01/2026 Duration: 09min

    நமது வாழ்வில் கணினியும் ஒரு அங்கம் என்று ஆகிவிட்ட நிலையில் கணினிப் பாவனை கண் பார்வையைப் பாதிக்குமா என்பது தொடர்பிலும் கண் ஆரோக்கியத்தை எப்படிப் பேணலாம் என்பது தொடர்பிலும் விளக்குகிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  • இன்றைய செய்திகள்: 8 ஜனவரி 2026 வியாழக்கிழமை

    08/01/2026 Duration: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 8/01/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • வரி ஏய்ப்பு செய்பவர்கள் வெளிநாடு செல்ல முடியாது- ATO கடும் நடவடிக்கை

    07/01/2026 Duration: 02min

    கணிசமான வரி நிலுவைகளை வேண்டுமென்றே செலுத்தாமல் இருப்பவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதில் தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நாதஸ்வரம் எப்படி உருவாகிறது? மரத்தை இசையாக்கும் நரசிங்கம்பேட்டை

    07/01/2026 Duration: 07min

    தமிழ் பண்பாடு சார்ந்த இசைக்கச்சேரிகள் முதல் திருமணங்கள் வரை நாதஸ்வரம் எனும் இசைக்கருவி தமிழர்களின் வாழ்வில் இணைந்திருக்கிறது. அப்படியான நாதஸ்வரம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் நரசிங்கம்பேட்டையில் உருவாக்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீட்டைக் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வர உருவாக்கத்தின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஆஸ்திரேலியாவில் அதிகளவானோருக்கு வைக்கப்படும் பெயர்கள் எவை தெரியுமா?

    07/01/2026 Duration: 02min

    ஆஸ்திரேலியர்கள் தமது பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களில் மிகவும் பிரபலமானவை எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • விக்டோரிய மாநில உயர்தர பரீட்சையில் தமிழ் பாடத்தில் சாதித்த மாணவர்கள்!

    07/01/2026 Duration: 18min

    விக்டோரியா மாநிலத்தில் 2025 VCE பரீட்சையில் தமிழ் பாடத்தில் அதிகூடிய புள்ளிகளுடன் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ள வினோஜன் பிரபாகரன், காவ்யா செல்வரூபன், ஹவீஷ் சுரேந்திரன், ஆகீஷன் உதயகுமார், சஹானி கௌரிதரன் மற்றும் திவா விவேகானந்தன் ஆகியோருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி: பேரழிவுகரமான தீ ஏற்படும் அபாயத்தில் ஆஸ்திரேலிய நகரங்கள்!

    07/01/2026 Duration: 05min

    நாடு முழுவதும் பெரும் பகுதிகளுக்கு கடும் வெப்ப அலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • இன்றைய செய்திகள்: 07 ஜனவரி 2026, புதன்கிழமை.

    07/01/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/01/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கை: மாகாண சபைத் தேர்தல் தாமதமாகிறது

    06/01/2026 Duration: 08min

    இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • 2026இல் ஆஸ்திரேலியர்களின் விருப்பத்திற்குரிய விடுமுறைத்தலங்கள் எவை?

    06/01/2026 Duration: 02min

    2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் விடுமுறைக்காக எந்த நாடுகளை குறிவைக்கிறார்கள் என்பதை புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Your first steps to engaging with Indigenous Australians - பூர்வீக குடிமக்களுடன் அர்த்தமுள்ள உறவை உருவாக்குவதற்கான முதல் படிகள்

    06/01/2026 Duration: 08min

    Connecting with Indigenous Australia can be daunting for a newcomer to the country. So, where do you start? We asked Yawuru woman Shannan Dodson, CEO of the Healing Foundation, about simple ways to engage with First Nations issues and people within your local community. - ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள், “Traditional Owners”, “Country”, அல்லது “First Nations” போன்ற சொற்களை அடிக்கடி கேட்கலாம் அல்லது பார்க்கலாம். பலரும் இதன் அர்த்தத்தைப் புரிந்து, அவர்களுடன் மரியாதையுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். ஆரம்பத்தில், இதற்கான முதலாவது படிகளை எடுப்பது சற்று குழப்பமாகவும், சந்தேகமூட்டுவதாகவும் இருக்கலாம். ஆனால் இது இங்குள்ள வாழ்க்கையும் வரலாற்றையும் புரிந்து கொள்ள ஒரு முக்கிய வழியாகும்.

  • இன்றைய செய்திகள்: 06 ஜனவரி 2026 செவ்வாய்க்கிழமை

    06/01/2026 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/01/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • வெனிசுவேலாவில் நடந்தது என்ன? இனி என்ன நடக்கலாம்?

    05/01/2026 Duration: 18min

    வெனிசுவேலா நாட்டில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த பின்னணியில் வெனிசுவேலாவில் நடந்தது என்ன என்பதையும், அமெரிக்க அரசியலில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பது குறித்தும், ஐ.நா என்ன செய்யக்கூடும் என்பது குறித்தும் அலசுகிறார் அமெரிக்காவின் Salisbury பல்கலைக்கழகத்தின் Conflict Analysis and Dispute Resolution பிரிவின் தலைவராக இருக்கும் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

page 6 from 77