Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 195:46:45
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

    18/12/2025 Duration: 08min

    தம்மை பாதுகாப்பான இடங்களில் மீளவும் குடியேற்ற கோரி மக்கள் போராட்டம் மற்றும் அண்மைய அனர்த்தம் குறித்து விவாதிக்க விசேட நாடாளுமன்ற அமர்வு. இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • செய்தியின் பின்னணி: Bondi தாக்குதலால் நாட்டில் கடுமையாக்கப்படும் சட்டங்கள்

    18/12/2025 Duration: 07min

    Bondi கடற்கரைத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பிரதமர் Anthony Albanese, இனவெறுப்பினைத் தூண்டும் பேச்சு, இனவன்மம், மதவன்மம் மற்றும் வன்முறையை தூண்டும் கருத்துக்களை எதிர்க்கும் வகையில், நாட்டின் சட்டங்களை மேலும் கடுமையாக்கும் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

    18/12/2025 Duration: 08min

    அமெரிக்கா- வெனிசுலா இடையே முற்றும் மோதல் போக்கு; காசா: போர் நிறுத்த மீறல்கள்; அமெரிக்கா- ரஷ்யா அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை; எகிப்து- இஸ்ரேல் இடையே இயற்கை எரிவாயு ஏற்றுமதி ஒப்பந்தம்; தைவானுக்கு 11 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத விற்பனை: அமெரிக்காவின் அறிவிப்பு; கம்போடியா- தாய்லாந்து இடையில் மீண்டும் மோதல்; சிரியாவில் அமெரிக்க படையினர் மீது ஐஎஸ் தாக்குதல் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் தமிழ்ப் பிரபாகரன்.

  • Bondi தாக்குதல்: சர்ச்சைக்குள்ளாகும் சஜித் அக்ரமின் இந்தியப் பின்னணி!

    18/12/2025 Duration: 03min

    Bondi கடற்கரை தாக்குதலில் தனது தந்தையுடன் இணைந்து ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நவீத் அக்ரமுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தந்தை மகன் தொடர்பிலான விவரங்களை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி: Port Arthur படுகொலைகள் ஏன் இன்று பேசப்படுகிறது?

    18/12/2025 Duration: 09min

    சிட்னி Bondi கடற்கரையில் 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்த இரண்டாவது மிகப் பெரிய படுகொலை சம்பவம் எனப்படுகிறது. 29 ஆண்டுகளுக்கு முன் தஸ்மேனிய மாநிலத்தில் இடம்பெற்ற Port Arthur படுகொலைகள் இன்று அதிகம் பேசப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • முதியோர் எதிர்கொள்ளும் வருமான சுரண்டல் : தடுப்பது எப்படி?

    18/12/2025 Duration: 12min

    Elders Financial Abuse - முதியோர் வருமான சுரண்டல் என்றால் என்ன? இதற்கான சட்ட உதவிகளை எங்கு பெற்றுக்கொள்ளலாம்? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.

  • கண் தொடர்பான பிரச்சினைகளாலும் தலைவலி வரக்கூடுமா?

    18/12/2025 Duration: 10min

    நம்மில் பலர் தலைவலியால் அடிக்கடி அவதிப்படுவோம். கண் தொடர்பான பிரச்சினைகளாலும் தலைவலி வரக்கூடுமா? விளக்கமளிக்கிறார் மெல்பனைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  • இன்றைய செய்திகள்: 18 அக்டோபர் 2025 வியாழக்கிழமை

    18/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 18/12/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • NSW-இல் துப்பாக்கி உரிமம் பெற்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர்?

    17/12/2025 Duration: 03min

    Bondi கடற்கரை துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலையடுத்து NSW மாநிலத்தில் சட்டபூர்வமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து தீவிரமான விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை - இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

    17/12/2025 Duration: 11min

    ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து சில பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் கருத்துக்களை கேட்டறிந்து விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • செய்தியின் பின்னணி : சிட்னி Bondi தாக்குதல் தொடர்பான பிந்தைய செய்திகள்

    17/12/2025 Duration: 09min

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி Bondi கடற்கரையில் ஹனுக்கா விழாவுக்காக கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள்மீது இரண்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தீவிரவாத தாக்குதல் என காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்த பிந்தைய செய்திகள் அடங்கிய செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 17 டிசம்பர் 2025 புதன்கிழமை

    17/12/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 17/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இலங்கை: வடக்கு கிழக்கில் மீனவர் போராட்டம்

    16/12/2025 Duration: 08min

    வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகள் அனர்த்தங்களினால் பெரும் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்த கோரி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • Bondi தாக்குதல்: தவறாக அடையாளம் காணப்பட்டதால் அச்சத்தில் வாழும் சிட்னி நபர்!

    16/12/2025 Duration: 02min

    Bondi கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்டதால் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக சிட்னி நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 16 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை

    16/12/2025 Duration: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 16/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • விக்டோரியாவில் வாடகைதாரர்களை பாதுகாக்க நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டம்!

    15/12/2025 Duration: 10min

    விக்டோரியா மாநிலத்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் சமீபதில் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் NewGen Consulting Australasia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை அனுபவம் கொண்ட எமில் ராஜா அவர்கள். அவர் ஒரு முன்னோடியான தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார எதிர்காலவியலாளர், நவீன தொழில்நுட்பம், நிதி சேவைகள் மற்றும் வணிக மாற்றத்திற்கான தீர்வுகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இன்னொரு பாரதி!

    15/12/2025 Duration: 05min

    தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர். நாம் பாரதி என்றழைக்கும் சுப்ரமணிய பாரதியின் நண்பர்தான் சோமசுந்தர பாரதியார். பாரதி போன்று தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் பிறந்தவர்தான் சத்தியானந்த சோமசுந்தரன். அவர் எப்படி சோமசுந்தர பாரதி ஆனார்? காலத்துளி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.

  • செய்தியின் பின்னணி: தேசத்தை உலுக்கிய சிட்னி Bondi தாக்குதல்!

    15/12/2025 Duration: 06min

    சிட்னி Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • செய்தியின் பின்னணி : உயிர் காக்கும் மருத்துவ கண்டுபிடிப்புகள் தாமதமாக கிடைப்பது ஏன்?

    15/12/2025 Duration: 10min

    உயிர் காக்கும் மருத்துவ தொழில்நுட்பங்கள் ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் பாவனைக்கு வர சுமார் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Sydney Lang தயாரித்த விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 15 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை

    15/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 15/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

page 10 from 77