Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 195:46:45
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

    24/12/2025 Duration: 03min

    கிறிஸ்மஸ் புதுவருட விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியா 2025: ஒரு மீள்பார்வை

    24/12/2025 Duration: 12min

    கடந்து செல்லும் 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் பேசப்பட்ட, அதிக தாக்கத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பை முன்வைக்கிறார் செல்வி.

  • இலங்கை: மீண்டும் தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிராக போராட்டம்

    24/12/2025 Duration: 08min

    யாழ். தையிட்டி பௌத்த விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதில் போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • All you need to know about Boxing Day in Australia  - Boxing Day பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

    24/12/2025 Duration: 08min

    Australian Boxing Day is a unique blend of cultural and commercial significance. While it doesn't have a solid religious connotation here, it's a day when Australians extend their Christmas festivities. It's often a time for family barbecues, cricket matches, and watching the iconic Sydney to Hobart yacht race. On the other hand, many Australians look forward to this day to sweep the stores for the best bargains.  - ஆஸ்திரேலியாவில் Boxing Day என்பது கலாச்சார மற்றும் வணிக முக்கியத்துவத்தின் தனித்துவமான கலவையாகும். இத்தினம் தொடர்பில் Maram Ismail ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 24 டிசம்பர் 2025 புதன்கிழமை

    24/12/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 24/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • செய்தியின் பின்னணி: Christmas Shopping- ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் கொடுத்தால் போதும்’ - நமக்கு உதவுமா?

    24/12/2025 Duration: 06min

    ஆஸ்திரேலியாவில் நுகர்வோர் மத்தியில் மிகப்பிரபலமான ஒன்று 'Buy now, pay later' திட்டம். இதன்கீழ் பொருட்களை வாங்கும் ஒருவர் முழுத்தொகையையும் உடனே செலுத்தாமல் தவணைமுறையில் அதனைச் செலுத்த முடியும். இதில் மறைந்துள்ள ஆபத்துகள் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மதுபோதையில் வாகனம் ஓட்டிய கணவன்: மன்னிப்புக்கோரிய விக்டோரியா Premier

    23/12/2025 Duration: 02min

    தனது கணவன் மதுபோதையுடன் வாகனம் ஓட்டிய சம்பவம் குறித்து விக்டோரியா Premier Jacinta Allan மன்னிப்புகோரியுள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • அடிலெய்டில் இந்தியப் பெண் கொலை, கணவன் கைது

    23/12/2025 Duration: 02min

    அடிலெய்டில் இந்தியப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 23 டிசம்பர் 2025 செவ்வாய்க்கிழமை

    23/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 23/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • அரிதான வெள்ளைக் கங்காரு விற்பனைக்கு!

    22/12/2025 Duration: 02min

    தெற்கு ஆஸ்திரேலியாவில் அரிய வகை சாம்பல் மற்றும் வெள்ளை நிற கங்காருக்கள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • உங்கள் Superannuation நிதியின் பயனாளியை நியமிப்பது ஏன் முக்கியம்?

    22/12/2025 Duration: 10min

    Superannuation Nomination என்பது, நீங்கள் இறந்தால் உங்கள் ஓய்வூதிய நிதியை யார் பெற வேண்டும் என்பதை பதிவு செய்து வைக்கும் செயல்முறையாகும். இது குறித்த பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நிதிதுறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரிஸ்பனை சேர்ந்த ராமநாதன் கருப்பையா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 22 டிசம்பர் 2025 - திங்கட்கிழமை

    22/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 22/12/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    21/12/2025 Duration: 07min

    தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து 97 லட்சம் பேர் நீக்கம்; செவிலியர்கள் போராட்டம்; 100 நாள் வேலைத்திட்டத்துக்கு மாற்றாக மோடி அரசின் புதிய திட்டம்; நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா- ராகுல் காந்தி விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு உள்ளிட்ட தமிழக/இந்தியச் செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • திருப்தியான தருணங்களும், சவால்களும், ஏமாற்றங்களும் - K. Arkesh, முன்னாள் IGP

    21/12/2025 Duration: 19min

    இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் காவல் துறை உயரதிகாரி (Inspector General of Police) கே. ஆர்கேஷ் அவர்கள். மிகவும் கடினமான, சவாலான பகுதிகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் கிளர்ச்சி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று செயல்பட்டவர். சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர். அவர் ஒரு கல்வியாளரும் கூட. மனிதவியல் (Anthropology) துறையில் முதுகலைப் பட்டமும், நாட்டுப்புறவியல் (Folklore) துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். மெல்பனில் நடைபெற்ற Fourth International Humanists Conference யில் கலந்துகொண்ட அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.

  • மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணம்: அவரது மகள் விடுக்கும் வேண்டுகோள்!

    20/12/2025 Duration: 06min

    மெல்பனில் தமிழ் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (15 – 20 டிசம்பர் 2025)

    20/12/2025 Duration: 06min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (15 – 20 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

  • இந்தோனேசிய - தமிழ் இசை உலகங்களை இணைக்கும் ரோஹன்!

    19/12/2025 Duration: 10min

    இந்தோனேசியாவின் புகழ்பெற்ற gamelan இசை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Gamelan மட்டுமல்ல tuba, baritone, euphonium என பல வாத்தியங்களை வாசிக்கும் திறமை கொண்டவர் மெல்பனைச் சேர்ந்த ரோஹன் ஐயர். அவரது இசைப் பயணம் தொடர்பிலும் அவரது பின்னணி தொடர்பிலும் அவர் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். மெல்பன் கலையகத்தில் அவரை சந்தித்து உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • MiniPod: To be stuffed | Words we use - MiniPod: To be stuffed | Words we use

    19/12/2025 Duration: 03min

    Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'to be stuffed'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'to be stuffed' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

  • Dating or matchmaking: How to find a partner in Australia - ஆஸ்திரேலியாவில் காதல் துணையை தேடுவது எப்படி?

    19/12/2025 Duration: 10min

    Many newly arrived migrants in Australia seek relationships not only for romance but to regain a sense of belonging. Separation from loved ones often drives this need for connection. This episode explores how dating in Australia differs from more collectivist cultures and how newcomers can find partners. From social events and dating apps to professional matchmaking, it highlights how migrants can build confidence, connection, and safety as they find love in a new country. - ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிறகு காதல் துணையை தேடுபவர்கள் எப்படி தங்களின் காதல் பயணத்தை தொடங்கலாம், அதில் எதைக் கவனிக்க வேண்டும், பாதுகாப்பான மற்றும் உண்மையான முறையில் நீடித்த உறவை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து ஆங்கிலத்தில் Maram Ismail எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 19 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை

    19/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 19/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

page 9 from 77