Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 195:46:45
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    14/12/2025 Duration: 09min

    இந்திய தலைநகர் புது டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் - 14 நாள் காவல்; திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • சிட்னி Bondi கடற்கரை தாக்குதல் தீவிரவாத சம்பவமாக அறிவிப்பு- 12 பேர் பலி, 29 பேர் காயம்

    14/12/2025 Duration: 03min

    சிட்னியின் பிரபல Bondi கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் குறித்த பிந்திய செய்திகளை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சிட்னி Bondi கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி, பலர் காயம்!

    14/12/2025 Duration: 02min

    சிட்னியின் பிரபல Bondi கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • From Mabo to modern Australia: the ongoing story of native title - Native Title: மாபோ வழக்கு முதல் இன்றைய ஆஸ்திரேலியா வரை

    14/12/2025 Duration: 09min

    Australia is known around the world for its rich and diverse First Nations cultures. But when it comes to native title and land rights, you might still wonder what they actually mean. Discover what native title means in Australia, how it began with the Mabo Case, what the Native Title Act does, and why it matters for all Australians. - ஆஸ்திரேலியா அதன் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பூர்வீகக்குடி கலாச்சாரங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் பூர்வீக நில உரிமை அங்கீகாரம் மற்றும் நில உரிமைகளைப் பொறுத்தவரை, அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பூர்வீக நில உரிமை அங்கீகாரம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? என்பது தொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (07 – 13 டிசம்பர் 2025)

    12/12/2025 Duration: 06min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (07–13 டிசம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.

  • A parent’s guide to help teens adjust to social media age restrictions - சமூக ஊடகத் தடையினால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு பெற்றோர் எவ்வாறு உதவலாம்?

    12/12/2025 Duration: 09min

    Australia is restricting access to social media accounts for under-16s, and many families are wondering what it means in practice. While the rules place responsibility on tech platforms rather than young people or their parents, the changes may still create stress for teens who rely on social media to stay connected. Find out how the ban will work, why connection still matters, and how experts suggest supporting young people through the transition. - ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மாற்றங்களைப் பற்றி இளம் வயதினருடன் எப்படி பேசலாம்? இந்த தடையினை பிள்ளைகள் புரிந்து கொண்டு அதனை சமாளிக்க பெற்றோர் அவர்களுக்கு உதவுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Veronica Lenard எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • MiniPod: Sleep on it | Words we use - MiniPod: Sleep on it | Words we use

    12/12/2025 Duration: 03min

    Learn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'sleep on it'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'sleep on it' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.

  • செய்தியின் பின்னணி: விடுமுறையிலும் விழிப்புடன் இருங்கள் - காட்டுத்தீ ஆபத்து

    12/12/2025 Duration: 06min

    அடுத்த வாரங்கள் மற்றும் மாதங்களில் காட்டுத்தீ அபாயம் மேலும் அதிகரிக்கும் நிலையில், அனைவரும் வீட்டில் இருந்தாலும் விடுமுறைக்குச் சென்றாலும் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • இன்றைய செய்திகள்: 12 டிசம்பர் 2025 - வெள்ளிக்கிழமை

    12/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 12/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்

    11/12/2025 Duration: 08min

    மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டம். இவைகள் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு

    11/12/2025 Duration: 06min

    வெனிசுலா எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா; உக்ரைன் - ரஷ்யா போர் சூழல்; புயல் பாதிப்புகளில் சிக்கியுள்ள காசா; வங்கதேசத்தில் தேர்தல்; பல்கேரியாவில் மக்கள் போராட்டம்: பிரதமர் ராஜினாமா; DR காங்கோவில் புதிய நகரை கைப்பற்றிய M23 ஆயுதக்குழு: 400 பேர் உயிரிழப்பு; சூடானிய போர் குற்றவாளிக்கு தண்டனை உள்ளிட்ட உலகச்செய்திகளின் முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • ஷேக்ஸ்பியர் நாடகத்திற்கு தனித்துவமான இசையால் உயிர்கொடுக்கும் அர்ஜுனன் புவீந்திரன்!

    11/12/2025 Duration: 14min

    சேக்ஸ்பியரின் The True History of the Life and Death of King Lear & His Three Daughters என்ற நாடகம் Belvoir தயாரிப்பில் சிட்னியில் மேடையேறியுள்ளது. இந்த நாடகத்தில் இணை இசையமைப்பாளராகவும், மேடை இசைக்கலைஞராகவும் உள்ள அர்ஜுனன் புவீந்திரன் அவர்களுடனான நேர்காணல் இது. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் Optometrist-க்கான வேலைவாய்ப்பு எந்தளவில் உள்ளது?

    11/12/2025 Duration: 13min

    ஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைத்துவருகிறோம். அந்தவகையில் Optometry தொடர்பில் அறிந்துகொள்வோம். Optometry சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் Optometrist செந்தில் முருகப்பா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • பெயர்: மான். தொழில்: அட்டூழியம் செய்தல்

    11/12/2025 Duration: 11min

    ஆஸ்திரேலியாவில் குடியேற அழைத்து வரப்பட்ட மான் இப்போது ஒரு வேண்டா விருந்தாளி. மான் எப்படி Feral Deer அல்லது காட்டு மான் ஆனது, மான் தரும் தொல்லைகள் என்ன என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.

  • செய்தியின் பின்னணி : 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

    11/12/2025 Duration: 10min

    ஆஸ்திரேலியாவின் 16 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கான சமூக ஊடகத் தடை டிசம்பர் 10 ஆம் தேதி புதன்கிழமை நடைமுறைக்கு வந்துள்ளது. SBS News-இற்காக Sam Dover ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 11 டிசம்பர் 2025 வியாழக்கிழமை

    11/12/2025 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 11/12/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • மெல்பன்- இலங்கை இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது Jetstar!

    10/12/2025 Duration: 02min

    ஆஸ்திரேலியாவின் Jetstar விமான நிறுவனம், இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கிளை இந்தியாவில் திறக்கப்படுகிறது!

    10/12/2025 Duration: 02min

    University of New South Wales, சிட்னியின் வெளிநாட்டு வளாகம் இந்தியாவில் திறக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • குணமடைய Stem cell (குருத்தணு) தேவைப்படும் வினோத் - நீங்களும் உதலாம்!

    10/12/2025 Duration: 12min

    இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இரட்டை குழந்தைகளின் தந்தையான 46 வயதான வினோத் அவர்களுக்கு stem cell donor (குருத்தணு கொடையாளி) தேவைப்படுகிறது. வினோத் அவர்களின் உடல்நிலை குறித்தும் அவருக்கு ஏன் stem cell சிகிச்சை அவசியம் என்பது குறித்தும் அவரின் மாமனார் ராமநாதன் அவர்களுடனும் stem cell donor registryயில் பதிவு செய்வது குறித்து ஹரிணி அவர்களுடனும் உரையாடுகிறார் செல்வி.

  • இன்றைய செய்திகள்: 10 டிசம்பர் 2025 புதன்கிழமை

    10/12/2025 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 10/12/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

page 11 from 77