Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 61:00:41
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    07/06/2024 Duration: 08min

    ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்; மலைய தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய அதிகரிப்பிற்கான வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு வழங்கமுடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளமைக்கு தொழிலாளர்கள் வரவேற்பு. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • இராணுவத்தில் இணைவது மூலம் விரைவாக குடியுரிமை பெற புதிய வழி

    07/06/2024 Duration: 08min

    ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையில் ஆட்சேர்ப்பு இலக்குகளை அடையவும் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் இணையும் வெளிநாட்டவர்கள் விரைவாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்ள வழிசெய்யும் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • “அவதூறு பேசிய சட்டத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – Greens கட்சி தலைவர்

    07/06/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 07/06/2024) செய்தி.

  • ஆஸ்திரேலிய போசம்: அறியாத ரகசியமும், கதைகளும்!

    06/06/2024 Duration: 08min

    ஆஸ்திரேலிய விலங்குகளிலேயே மனிதர்களின் வசிப்பிடங்களில் பயமின்றி புழங்கும் மரவாழ் இரவு விலங்குகள் போசம்கள். போசம் குறித்து நாம் அறியாத தவல்களையும், கதைகளையும் தொகுத்தளிக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

    06/06/2024 Duration: 02min

    Kings Birthday விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலைவிதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • நீங்கள் buy now, pay later சேவையைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குபவரா?

    06/06/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் தற்போது பலரும் பயன்படுத்திவரும் buy now, pay later வசதி தொடர்பில் கடுமையான நடைமுறைகள் மற்றும் விதிகளை வெளியிட அரசு தயாராகி வருவதால், இளம் ஆஸ்திரேலியர்கள் இதனூடாக இனிமேல் பொருட்களை வாங்குவது கடினமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • உயிருடன் கால்நடை ஏற்றுமதிக்கு அரசு தடை விதிப்பது ஏன்?

    06/06/2024 Duration: 08min

    உயிருடன் கால்நடைகளை ஏற்றுமதி செய்வது 2028 ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறுத்தப்படுகிறது என்றும் தடை செய்யப்படுகிறது என்றும் அரசு அறிவித்துள்ளது. அரசின் முடிவு விவசாயிகளிடம் கோபத்தையும், விலங்கு நலன் விரும்புவோரிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. இது குறித்த விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Sam Dover & Christopher Tan. தமிழில்: றைசெல்.

  • NDIS திட்டத்தில் 2 பில்லியன் டாலர் முறைகேடு! அமைச்சர் ஆத்திரம்!

    06/06/2024 Duration: 04min

    செய்திகள்: 6 ஜூன் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • நம்மை குறிவைக்கும் மோசடிகள்! தப்பிப்பது எப்படி?

    05/06/2024 Duration: 12min

    நாட்டில் Cyber attack என்று அழைக்கப்படும் இணைய தாக்குதல்களின் எண்ணிக்கையும், வீரியமும் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற தரவு திருட்டில் Ticketek நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டன. இந்த பின்னணியில் நம்மை குறிவைக்கும் மோசடிகளிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று விளக்குகிறார் ஆஸ்திரேலிய பெடரல் அரசின் நிறுவனமொன்றில் Cyber Security Specialistயாக பணியாற்றுகின்றவரும், பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் பொறுப்பாளருமான சிவா கைலாசம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • இந்திய தேர்தல் முடிவு: அறியவேண்டிய செய்திகளும், தகவல்களும்!

    05/06/2024 Duration: 09min

    இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், தேர்தல் முடிவு குறித்த முக்கிய செய்திகளையும், அது தொடர்பான தகவல்களையும் முன்வைக்கிறார் தமிழ்நாட்டிலிருந்து ஊடகவியலாளர் தமிழ் பிரபாகரன் அவர்கள். இந்திய தேர்தல் களம் குறித்த தொகுப்பின் பதினான்காம் பாகம்.

  • கலைஞர் 100: அன்று முதல் இன்றுவரை!

    05/06/2024 Duration: 10min

    தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படும் இவ்வேளையில் கலைஞரின் கலைப் பயணம் குறித்த விவரணத்தை படைக்கிறார் ஊடகத்துறையில் பொன்விழா காணும் ச.சுந்தரதாஸ் அவர்கள். குரல் கொடுத்தவர்கள்: காந்திமதி தினகரன், வர்சினி கேதீஸ்வரன் & அகலவன் ஸ்ரீ. நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 2.

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வெற்றியை அறிவித்தார்

    04/06/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 05/06/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • India General Election 2024 Results - Wins, Losses and Surprises - இந்திய நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சொல்வது என்ன?

    04/06/2024 Duration: 12min

    As India’s election counting progressed on Tuesday, with hundreds of millions of votes counted and leads solidifying on most of the country’s 543 seats, Mr Savithiri Kannan who is a veteran freelance journalist and editor of Aram online magazine analyse more about the election results. - இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரம் என்ன? மத்தியில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள்? கட்சிகளின் வெற்றி தோல்விகளுக்கான காரணம் என்ன? போன்ற விடயங்களை அலசுகிறார் அறம் இணைய இதழ் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான திரு சாவித்திரி கண்ணன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • Sita- A Dance Film in Sydney - சிட்னியில் 'சீதா'- வித்தியாசமான ஒரு கலைப்படைப்பு

    04/06/2024 Duration: 09min

    Samskriti School of Dance, in collaboration with Apsaras Dance Company, presents 'Sita' on Friday, June 7th, at the Arts and Cultural Exchange in Parramatta, Sydney. Renuka Thuraisingham speaks with Aravinth Kumarasamy, Artistic Director of Apsaras Dance Company, about this event. - Samskriti School of Dance-இன் ஏற்பாட்டில் அப்சரஸ் நடன நிறுவனம் வழங்கும் 'சீதா' என்ற நிகழ்வு ஜுன் 7ம் திகதி வெள்ளிக்கிழமை சிட்னியில் Arts and Cultural Exchange, Paramatta எனுமிடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பில் அப்சரஸ் நடன நிறுவனத்தின் கலை இயக்குனர் அரவிந்த் குமாரசாமி அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Skilled Migration: என்னென்ன வேலைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கவுள்ளது?

    04/06/2024 Duration: 03min

    ஆஸ்திரேலியாவில் என்னென்ன வேலைகளுக்கான விசாக்களுக்கு அரசு முன்னுரிமையளித்து அதை விரைவாகப் பரிசீலிக்கும் என்ற முன்வரைபுப் பட்டியலை Jobs and Skills Australia வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய குடியுரிமையை விரைவாகப் பெற புதிய வழியைத் திறக்கும் இராணுவம்

    04/06/2024 Duration: 02min

    ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் இணையும் வெளிநாட்டவர்கள் விரைவாக ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக்கொள்ள வழிசெய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு தகுதிபெறுவதற்கு சில முன் நிபந்தனைகளை பூர்த்திசெய்ய வேண்டும். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • விக்டோரியாவில் சிறைக் காவலர்கள் ஊதிய உயர்வு வேண்டி வேலை நிறுத்தப் போராட்டம்

    04/06/2024 Duration: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/06/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு ஜுலை முதல் சம்பள உயர்வு!

    03/06/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் minimum wage-ஆகக்குறைந்த சம்பளம் பெறும் பணியாளர்கள் 3.75 வீத ஊதிய உயர்வு பெறவுள்ளதாக Fair Work Commission அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 93 வயதில் 5வது திருமணம் செய்துகொண்டார் ஆஸ்திரேலிய செல்வந்தர் Murdoch

    03/06/2024 Duration: 02min

    உலக ஊடகச் சக்கரவர்த்தியான ஆஸ்திரேலியாவின் Rupert Murdoch தனது 93வது வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Dancer from Singapore to Delight Sydney - சிங்கப்பூரிலிருந்து சிட்னியைப் பரவசத்திலாழ்த்த வரும் நாட்டியக் கலைஞர்

    03/06/2024 Duration: 07min

    An Interview with Mohanapriyan Thavarajah, Associate Creative Director of Apsaras Dance Company, about his upcoming performance at the Swara-Laya Fine Arts Institute's annual music festival in Sydney with Kulasegaram Sanchayan. - ஸ்வர-லயா நுண்கலைக் கழகம் சிட்னியில் நடத்தும் வருடாந்த இசை விழா குறித்தும், அதில் தனது நிகழ்ச்சி குறித்தும், சிங்கப்பூரில் இயங்கும் நடன நிறுவனமான Apsaras Dance Companyயின் இணை கலை இயக்குநர் மோகனப்ரியன் தவராஜா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

page 23 from 25