Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கப் பயணம்!
18/09/2024 Duration: 08minதமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் உள்ள முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அரசு முறை பயணம் செய்திருந்தார். அது தொடர்பான தொகுப்புடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
“Siddha medicine addresses many issues that modern medicine cannot” - “நவீன மருத்துவம் தீர்க்கமுடியாத பலவற்றை சித்தா மருத்துவம் தீர்க்கிறது"
18/09/2024 Duration: 13minDr Y. R. Manekshah, M.D. (Siddha) is an Associate Professor at the Government Siddha Medical College and Hospital in Palayangottai under the Department of Siddha Medicine, Government of Tamil Nadu. Dr. Manekshah has authored several books on Siddha medicine, covering topics such as infertility, liver diseases, thyroid disorders, heart conditions, kidney ailments, and neurological diseases. In addition to being a renowned Siddha practitioner, he is also a psychotherapist, author, and speaker. - Dr Y R மானக்சா M.D. (சித்தா) அவர்கள் தமிழக அரசின் சித்த மருத்துவ துறையின் கீழ் பாளையங்கோட்டையில் இயங்கும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இணைப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். சித்தா மருத்துவர் மானக்சா அவர்கள் சித்த மருத்துவத்தில் குழந்தையின்மை, கல்லீரல் நோய்கள், தைராய்டு நோய்கள், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் நரம்பியல் நோய்கள் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். இவர் சிறந்த சித்த மருத்துவ நிபுணர் மட்டுமல்லாது சித்த மருத்துவ நூல் எழுத்தாளர் மற்றும் பேச்சாளரும் ஆவார்.
-
Blue Mountains-இல் கொலை செய்யப்பட்ட இரு சிறுவர்கள்- தாய் கைது- பின்னணி என்ன?
18/09/2024 Duration: 06minநியூ சவுத் வேல்ஸ் மாநிலம் Blue Mountainsஸில் உள்ள வீடொன்றிலிருந்து இரண்டு ஆண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தநிலையில் அவர்களின் தாய் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
உணவும் நீரிழிவு நோயும் - அசட்டையாக இருக்காதீர்கள்!
18/09/2024 Duration: 10minநீரிழிவு நோய் உங்களை அணுகாமல் இருக்க நன்கு சரிவிகித உணவு வகைகளை உட்கொள்வது மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்தல் அவசியம். நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க முதலில் நாம் கவனம் செலுத்த வேண்டியது நாம் உண்ணும் உணவு. நீரிழிவு நோயின் பதிப்புகள் அதனை எவ்வாறு வரும் முன் தடுப்பது மற்றும் எவ்வாறு உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்த விவரணம். தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
பாதாள உலகிற்கான செயலியை உருவாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
17/09/2024 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 18/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து கட்டணம் 50 சதங்களாகவே தொடரவுள்ளது!
17/09/2024 Duration: 02minகுயின்ஸ்லாந்து மாநிலத்தில் பரீட்சார்த்த அடிப்படையில் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் 50 சதங்களாகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில் இத்திட்டம் நிரந்தரமாக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்திய மாணவர்களின் ஆஸ்திரேலிய கனவினைச் சிதைக்கும் விசா மோசடிகள்
16/09/2024 Duration: 02minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 17/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
16/09/2024 Duration: 09minமேற்கு வாங்க மாநிலத்தில் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் - முதலமைச்சர் மம்தாவிற்கு நெருக்கடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசனுக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சை உரையாடல் மற்றும் தமிழகத்தில் அதிமுக - பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் கூட்டணி உருவாகுமா? போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல மற்றுமொரு முயற்சி!
16/09/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 16/09/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
ஐ.நா மனித உரிமை பேரவை: இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் நீட்டிக்கப்படுமா?
14/09/2024 Duration: 12minஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகியது.
-
இந்த வார முக்கிய செய்திகள்
14/09/2024 Duration: 08minஇந்த வார முக்கிய செய்திகள்: 14 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.
-
தனது Dulwich Hill வீட்டை விற்கும் பிரதமர் Anthony Albanese!
13/09/2024 Duration: 02minஆஸ்திரேலியாவின் 31வது பிரதமர் Anthony Albanese, சிட்னி Dulwich Hillஇல் உள்ள தனது முதலீட்டுச் சொத்தை விற்பனைக்கு விட்டுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மாத்தளை சோமுவின் “ஒற்றைத்தோடு”
13/09/2024 Duration: 11minஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஆளுமை மாத்தளை சோமு அவர்கள். அவரின் அடுத்த படைப்பிலக்கியமாக “ஒற்றைத்தோடு” எனும் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது. தனது சிறுகதைத்தொகுப்பு குறித்தும், அடுத்துவரும் அவரின் இலக்கிய படைப்புகள் குறித்தும் எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
13/09/2024 Duration: 10minபொறுப்புக்கூறலுக்கு புதிய அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் - ஐ.நா மனித உரிமை பேரவை கோரிக்கை! தேர்தல் நாள் நெருங்குகிறது - அரசியல் மேடைகளில் பேசப்படும் விடயங்கள் எவை?
-
தங்கம் விலை ஏன் கூடுகிறது? தொடர்ந்து அதிகரிக்குமா?
13/09/2024 Duration: 09minதங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கான காரணம் தொடர்பிலும் தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா என்பது தொடர்பிலும் பதிலளிக்கிறார் தமிழ் நாட்டின் பிரபல பொருளியல் நிபுணரும் Hindustan Chamber of Commerce நிறுவனத்தின் தலைவருமான வள்ளியப்பன் நாகப்பன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Indigenous astronomy: How the sky informs cultural practices - பூர்வீகக் குடிமக்களின் வியத்தகு வானியல் அறிவு
13/09/2024 Duration: 09minAstronomical knowledge of celestial objects influences and informs the life and law of First Nations people. - பூர்வீக குடிமக்களின் வானியல் மற்றும் நட்சத்திரங்கள் குறித்த அறிவு அபாரமானது. இது தொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
முதியோர் பராமரிப்பு சீர்திருத்தங்கள்: வீட்டிலேயே தங்குவதற்கான ஆதரவு அதிகரிக்கிறது
13/09/2024 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 13/09/2024) செய்தி.
-
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது - விரைவில் வரவுள்ள சட்டம்
13/09/2024 Duration: 08minஇந்த ஆண்டு இறுதிக்குள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நடைமுறைப்படும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக Federal அரசு அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை கொண்டாடும் தமிழக கிராமம்! - ஒரு நேரடி ரிப்போர்ட்
12/09/2024 Duration: 07minஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவேண்டும் என்று ஒரு தமிழக கிராமம் காத்திருக்கிறது. துளசேந்திரபுரம் என்ற கமலா ஹாரிசின் பூர்வீக கிராமத்திற்கு பயணம் செய்து விவரணத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ஆஸ்திரேலிய பயணிகள் பிரிட்டன் செல்வதற்கு இனி பயண அனுமதி பெறவேண்டும்!
12/09/2024 Duration: 02minபிரிட்டன் செல்லும் ஆஸ்திரேலிய பயணிகள் விரைவில் Electronic Travel Authorisation (ETA) எனப்படும் பயண அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறை கொண்டுவரப்படுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.