Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
Physiotherapist: ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு எந்தளவில் உள்ளது?
30/11/2025 Duration: 13minஆஸ்திரேலியாவிலுள்ள மாணவர்கள் தமது எதிர்கால தொழில்துறையாக எதைத் தெரிவுசெய்யலாம் என்பதில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு உதவும் நோக்கில் சில முக்கியமான தொழில்துறைகள் தொடர்பில் நாம் நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளோம். அந்தவகையில் Physiotherapy தொடர்பில் அறிந்துகொள்வோம். Physiotherapy சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் சிட்னியைச் சேர்ந்த physiotherapist பிரியா ஞானகுமாரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? பின்னணி என்ன?
29/11/2025 Duration: 09minஅமெரிக்கா, வெனிசுவேலா மீது தாக்குதலை நடத்த ஆயத்தமாக இருப்பதாக பரபரப்பாகப் பேசப்படுகிறது. இதன் பின்னணி தொடர்பிலும் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பிலும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் மூத்த ஒலிபரப்பாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese!
29/11/2025 Duration: 02minஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albaneseயும் அவரது இணையான Jodie Haydonனும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (23 – 29 நவம்பர் 2025)
28/11/2025 Duration: 06minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (23 – 29 நவம்பர் 2025) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: செல்வி.
-
டாஸ்மேனியாவில் நீரில் தள்ளப்பட்டு உயிரிழந்த இந்தியர்: குற்றவாளிக்கு தண்டனை விதிப்பு!
28/11/2025 Duration: 03minடாஸ்மேனியாவில் Deepinderjeet Singh என்ற 27 வயது இளைஞர் நீருக்குள் தள்ளிவிடப்பட்டு மரணமடைந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
MiniPod: Take it easy | Words we use - MiniPod: Take it easy | Words we use
28/11/2025 Duration: 03minLearn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'take it easy'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது 'take it easy' போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
-
இன்றைய செய்திகள்: 28 நவம்பர் 2025 - வெள்ளிக்கிழமை
28/11/2025 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 28/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
செய்தியின் பின்னணி: Black Friday விற்பனைகளில் பரவும் Ghost Store மோசடிகள்!
28/11/2025 Duration: 07minஎச்சரிக்கை - Black Friday விற்பனை பரபரப்புக்கிடையில், புதிய வகை இணையவழி மோசடி ஒன்று பெருமளவில் பரவி வருகிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
27/11/2025 Duration: 09minமட்டக்களப்பில் தொல்லியல் திணைக்களத்தின்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு. அமைதியாக இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் மற்றும் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பலபகுதிகளில் சீரற்ற காலநிலையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு உள்ளிட்டசெய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றைமுன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர்மதிவாணன்.
-
உலகம்: இந்த வார செய்திகளின் தொகுப்பு
27/11/2025 Duration: 07minரஷ்யா- உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை நிலை; அமெரிக்கா- வெனிசுலா மோதல் போக்கு: பல நாடுகளின் முக்கிய விமானங்களுக்கு தடை; அமெரிக்காவில் தேசித காவல்படையினர் மீது ஆப்கானியரின் தாக்குதல்; மேற்குக்கரையை குறிவைத்துள்ள இஸ்ரேலிய படைகள்; வங்கதேச குடிசைப்பகுதிகளில் தீ விபத்து; ஹாங்காங்கில் அடுக்குமாடிகள் தீ விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைத்திருக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
$1200 அபராதம் வரக்கூடிய சீட் பெல்ட் தவறு – பலர் அறியாமலே செய்யும் குற்றம்!
27/11/2025 Duration: 03minஆஸ்திரேலியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் பிரதேசங்களிலும் கார் ஓடிக் கொண்டிருக்கும் போது சீட் பெல்ட்டை கைகளுக்கு கீழே வயிறு பகுதியில் அணிந்திருந்தால் அபராதம் விதிக்கபடும். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இந்து சமயக் கூறுகளோடு ஆறுதல் கூறும் ஜெயந்தி
27/11/2025 Duration: 09minசிட்னி மருத்துவமனைகளில் இந்து சமய பிராத்தனையாளராக பணிபுரியும் ஜெயந்தி ரமணன், தனது பணி குறித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
-
ஒட்டகம்: அழைத்து வந்த விருந்தாளியை பகையாளியாக்கிய ஆஸ்திரேலியா!
27/11/2025 Duration: 09minஒட்டகம் ஆஸ்திரேலிய மண் சார்ந்த விலங்கு அல்ல. ஒட்டகம் தாவரங்களை அழிக்கிறது, தண்ணீரை குடிக்கிறது என்பதால் ஒட்டகங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இந்த நாட்டுக்குள் ஒட்டகம் எப்படி வந்தது, விருந்தாளியாக அழைத்துவரப்பட்ட ஒட்டகத்தை ஆஸ்திரேலியா எப்படி பகையாளியாக்கியது என்ற தகவல்களை தொகுத்தளிக்கிறார் றைசெல்.
-
செய்தியின் பின்னணி: அதிக வாடகைச் செலவு – பெர்த் நகரம் தொடர்ந்தும் முன்னிலை
27/11/2025 Duration: 08minமேற்குத் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் நாட்டின் மிக அதிகமாக வீட்டு வாடகைக்கு செலவாகும் தலைநகரம் என்ற நிலையை தக்க வைத்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 27 நவம்பர் 2025 வியாழக்கிழமை
27/11/2025 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/11/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
விசா ரத்துச்செய்யப்பட்டவர்களை நாடுகடத்தும் திட்டத்தை நிறுத்துமாறு அரசுக்கு அழுத்தம்
26/11/2025 Duration: 02minவிசா ரத்துச்செய்யப்பட்டவர்களை நவுருவுக்கு அனுப்பும் திட்டத்தை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
MiniPod: Call it a day | Words we use - MiniPod: Call it a day | Words we use
26/11/2025 Duration: 04minLearn a new phrase and make your English sound more natural and interesting. Words We Use is a bilingual series that helps you understand idioms like 'call it a day'. - ஒரு புதிய சொற்றொடரை கற்று, உங்கள் ஆங்கிலம் மேலும் இயல்பாகவும் புதுமையாகவும் ஒலிக்கச் செய்யுங்கள். ‘Words We Use’ என்பது ‘call it a day’ போன்ற சொற்பிரயோகங்களை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவும் இருமொழி தொடர் நிகழ்ச்சியாகும்.
-
Obesity: Causes, Effects and Prevention - உடற்பருமன்: காரணங்கள், விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்
26/11/2025 Duration: 13minObesity is one of the major health issues affecting many people in our community. The causes of obesity, its impact on health, and ways to overcome it are explained in a simple and easy-to-understand manner by General Physician Dr Thiyagarajah Srikaran. The interview is conducted by Praba Maheswaran. - நமது சமூகத்தில் பலரையும் பாதிக்கும் பிரச்சனைகளில் குறிப்பிடத்தக்கதொன்று உடற் பருமன் ஆகும். உடற் பருமனுக்கான காரணங்கள், உடல்நல பாதிப்புகள் மற்றும் இதிலிருந்து மீள என்ன செய்யலாம் என்பதை எளிய முறையில் விளக்குகிறார் சிட்னியிலுள்ள பொதுநல மருத்துவர்(GP) Dr தியாகராஜா சிறீகரன் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
செய்தியின் பின்னணி: உணவு delivery பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க ஒப்புதல்!
26/11/2025 Duration: 06minஆஸ்திரேலியாவின் உணவு delivery பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 26 நவம்பர் 2025 புதன்கிழமை
26/11/2025 Duration: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/11/2025) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.