Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodes
-
தமிழைப் பரப்பும் சீன கவிஞர் யூசி
29/01/2026 Duration: 13minகவிஞர் யூசி தைவான் நாட்டைச் சேர்ந்த உலகக் கவிஞர். இவர் திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதை பெற்ற முதல் அயல் நாட்டுக் கவிஞர் இவர். கவிஞர் யூசியுடன் நேர்காணல். இந்த நேர்காணலை ஒழுங்கமைக்க உதவிய தைவான் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த அருள் வேலு பாலாசி, கவிஞர் யூசி குறித்த கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார். கவிஞர் யூசியை சீன மொழியில் நேர்காண உதவியவர் SBS Mandarin ஒலிபரப்பின் நிறைவேற்றுத் தயாரிப்பாளர் Zhou Li. மொழிபெயர்க்க உதவியவர் William Shi. நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன். 2015ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது
-
பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பது மற்றும் வாங்குவது எப்படி?
29/01/2026 Duration: 12minநாம் பயன்படுத்திய காரை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய நினைக்கும் போது அதில் உள்ள சிக்கல்கள் என்ன? எவ்வாறு அவதானமாக விற்பனை செய்ய வேண்டும்? தனிப்பட்ட முறையில் விற்பனை செய்யப்படும் காரை வாங்குபவர்கள் எவ்வாறு பரிசோதித்து அவதானமாக வாங்க வேண்டும் என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த விவரணம். தயாரித்து முன் வைக்கிறார் செல்வி.
-
இன்றைய செய்திகள்: 29 ஜனவரி 2026 வியாழக்கிழமை
29/01/2026 Duration: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 29/01/2026) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
செய்தியின் பின்னணி: நம்மைச் சுற்றி நடக்கும் Food Fraud - உணவு மோசடி பற்றி தெரியுமா?
28/01/2026 Duration: 09minஉணவுப் பொருட்களில் நடைபெறும் மோசடி – அதாவது Food fraud தற்போது ஆஸ்திரேலியாவில் அதிக கவனம் பெறும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சியை SBS Small Business Secrets யின் Sandra Fulloon எழுதிய விவரணத் தகவலோடு முன்வைக்கிறார் றைசெல்.
-
எச்சரிக்கை! மோசடிகளால் ஆஸ்திரேலியர்கள் கடந்த ஆண்டு இழந்தது $335 மில்லியன்!
28/01/2026 Duration: 02minகடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் மோசடிகளால் சுமார் $335 மில்லியன் இழந்துள்ளனர். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
‘சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்’- பேரா. ரவிவர்மகுமார்
28/01/2026 Duration: 18minஇந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலான சட்ட அனுபவம் கொண்ட பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்கள் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் Advocate General ஆவார். இந்தியாவில் சமூக நீதியும் இடஒதுக்கீடும் குறித்த அரசியலமைப்பு சட்ட நிபுணராக பரவலாக அறியப்படுகிறார். கர்நாடக மாநில பின்தங்கிய வகுப்புகள் ஆணையத்தின் நிறுவனர் தலைவரான அவர், சில சர்வதேச நாடுகளின் அரசியலமைப்பு வடிவமைப்பில் சமூக நீதி, இட ஒதுக்கீடு கொள்கைகள் சேர்க்கப்படுவதில் பங்களித்துள்ளார். இந்தியாவில் மண்டல் வழக்கு முதல் EWS வழக்கு வரை முக்கிய இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அவர் வாதாடியுள்ளார். தற்போது உச்சநீதிமன்றம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும், முக்கிய குற்ற வழக்குகளில் Special Public Prosecutor ஆகவும் பணியாற்றி வரும் பேராசிரியர் ரவிவர்மா குமார் அவர் மெல்பனில் நடைபெற்ற Fourth International Humanists Conference யில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தார். அவரை சிட்னி SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடியவர் றைசெல்.
-
செய்தியின் பின்னணி: Centrelink சட்டத்தை முறையாக பின்பற்றவில்லை. எப்படி?
28/01/2026 Duration: 06minகுழந்தை பராமரிப்பு நிதி (Child Support) தொடர்பான சட்டங்களை, நம் நாட்டின் 'சர்வீசஸ் ஆஸ்திரேலியா' (Services Australia) அமைப்பு முறையாகப் பின்பற்றவில்லை என்றும் தெரிந்து கொண்டே சட்டத்தை மீறி செயல்பட்டது என்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குறைகேள் அதிகாரி (Ombudsman) பணிமனை வெளியிட்டுள்ளது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 28 ஜனவரி 2026 - புதன்கிழமை
28/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 28/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இலங்கை: கிவுல் ஓயா திட்டமும் தமிழர் தரப்பின் எதிர்ப்பும்
27/01/2026 Duration: 08minமகாவலி நதி நீரை வவுனியா மற்றும் முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லும் கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தமிழ்த்தரப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
அகதிகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் ‘SBS Les Murray’ விருது – நீங்களும் பரிந்துரைக்கலாம்
27/01/2026 Duration: 02minஅகதிகளின் சாதனைகளை கொண்டாடும் ‘SBS Les Murray’ விருதிற்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
இலங்கையில் வேர்... இங்கிலாந்தில் மகுடம்! : ‘Sir’ பட்டம் பெற்ற தமிழர்
27/01/2026 Duration: 10minஇங்கிலாந்திலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு, ஆண்டகை (knighthood அல்லது Sir) பட்டத்தை இந்த வருட தொடக்கத்தில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் கொடுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அவர் வந்திருந்த போது, SBS கலையகத்தில் சந்தித்து குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். இலங்கையில் அவரது வளர்ப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தில் நிர்வாகியாக அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவருடன் ஒரு நீண்ட நேர்காணல் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்த நேர்காணலின் நிறைவுப் பாகம் இது.
-
சாதாரண தொடக்கம்... அசாத்தியமான பயணம்: ‘Sir’ பட்டம் பெற்ற தமிழர்
27/01/2026 Duration: 11minஇங்கிலாந்திலுள்ள லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா அவர்களுக்கு, ஆண்டகை (knighthood அல்லது Sir) பட்டத்தை இந்த வருட தொடக்கத்தில் மன்னர் மூன்றாவது சார்ள்ஸ் கொடுத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிற்கு அவர் வந்திருந்த போது, SBS கலையகத்தில் சந்தித்து குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். இலங்கையில் அவரது வளர்ப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகள் மற்றும் ஒரு கல்வி நிறுவனத்தில் நிர்வாகியாக அவர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அவருடன் ஒரு நீண்ட நேர்காணல் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இரண்டு பாகங்களாகப் பதிவேறும் இந்த நேர்காணலின் முதல் பாகம் இது.
-
இன்றைய செய்திகள்: 27 ஜனவரி 2026 - செவ்வாய்க்கிழமை
27/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 27/01/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
விக்டோரியாவில் விரைவில் பொது போக்குவரத்திற்கு myki கார்டு தேவையில்லை
26/01/2026 Duration: 02minவிக்டோரியாவில் $1.7 பில்லியன் Myki card மேம்பாட்டில் முக்கிய கட்டமாக contactless பயணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி.
-
செய்தியின் பின்னணி : ஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு தற்போது உயர என்ன காரணம்?
26/01/2026 Duration: 07minஆஸ்திரேலிய டாலரின் மதிப்பு கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி.
-
What actually happened on January 26? - ஆஸ்திரேலியா தினம் – ஜனவரி 26 தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி
26/01/2026 Duration: 09minJanuary 26 is one of the most debated dates in Australia’s history. Often described as the nation’s birthday, the day marks neither the formal founding of the colony nor the creation of the Commonwealth. Instead, it reflects a layered history shaped by colonisation, political decisions, and ongoing First Nations resistance. Understanding what actually happened on January 26 reveals why the date is experienced so differently across the country. - ஜனவரி 26 — ஆஸ்திரேலியா தினமாக நாடு முழுவதும் அரசு விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், அதன் வரலாறு எளிமையானது அல்ல. பலருக்கு, இது 1788ஆம் ஆண்டு First Fleet கப்பற்படை சிட்னிக்கு வந்த நாளாகக் கருதப்படுகிறது. ஆனால், பலருக்கு — குறிப்பாக பூர்வீகக்குடி சமூகத்தினருக்கு — இந்த நாள் இழப்பு, கலாச்சார சிதைவு, துன்பம் மற்றும் எதிர்ப்பின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
-
இன்றைய செய்திகள்: 26 ஜனவரி 2026 - திங்கட்கிழமை
26/01/2026 Duration: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 26/01/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார செய்திகளின் தொகுப்பு
25/01/2026 Duration: 09minகுடியரசு தினத்தை இன்று கொண்டாடும் இந்தியா; தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் தினகரன்; விஜய் நடத்திய மாநாடு உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
தமிழ் மற்றும் இந்து சமூகங்களுக்கு சேவை: அரசின் உயரிய விருது பெறும் தமிழன்
25/01/2026 Duration: 06minஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் மெல்பன் நகரில் வாழும் திரு செல்லையா நல்லையா அவர்கள் பெற்றுள்ளார். விக்டோரியா மாநிலத்தின் தமிழ் மற்றும் இந்து சமூகங்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி குறித்து, திரு நல்லையா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
உயர்நிலைக் கல்வி சேவை: ஆஸ்திரேலிய அரசின் உயரிய விருது பெறும் தமிழன்
25/01/2026 Duration: 06minஆஸ்திரேலிய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான OAM எனப்படும் Medal of the Order of Australia என்ற விருதை (General Division) பொதுப்பிரிவில் மெல்பன் நகரில் வாழும் கௌரவ பேராசிரியர் செஸ்னி றொமேஷ் நாகராஜா அவர்கள் பெற்றுள்ளார். உயர்நிலைக் கல்விக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, இந்த மதிப்பு மிக்க பட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. அவரது சேவைகள் மற்றும் அவரது பின்னணி குறித்து, பேராசிரியர் நாகராஜா அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.