Sbs Tamil - Sbs

  • Author: Vários
  • Narrator: Vários
  • Publisher: Podcast
  • Duration: 62:59:58
  • More information

Informações:

Synopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodes

  • கிரின்ஸ் கட்சியின் NRPA ஆணையம் வாடகை வீடுகளில் உள்ளவர்களை பாதுகாக்குமா?

    08/09/2024 Duration: 08min

    வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றும் வாடகைச் சட்டத்தை பின்பற்றாத ரியல் எஸ்டேட் முகவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்ட National Renters Protection Authority தேசிய வாடகைதாரர்கள் பாதுகாப்பு ஆணையம் என்ற திட்டத்தை கிரீன்ஸ் கட்சி முன்வைத்துள்ளது. இது குறித்து பெர்த் நகரில் ரியல் எஸ்டேட் துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் Propertynet Real Estate நிறுவனத்தின் உரிமையாளருமான அரன் கந்தையா அவர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    06/09/2024 Duration: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 7 செப்டம்பர் 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • Why is dental health care expensive in Australia? - ஆஸ்திரேலியாவில் பல் மருத்துவம் தொடர்பில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

    06/09/2024 Duration: 10min

    Understanding how dental care works in Australia can be crucial for maintaining your health and well-being. Learn how to access dental services, the costs involved, and some essential dental health tips to keep you and your family smile bright. - ஆஸ்திரேலியாவில் பல் பராமரிப்பு சேவை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்கு முக்கியமானது. இந்த விவரணத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல் பராமரிப்பு சேவைகளை எவ்வாறு அணுகுவது, அதற்கான செலவுகள் மற்றும் சில அத்தியாவசிய பல் சுகாதார குறிப்புகளைப் பார்ப்போம். ஆங்கில மூலம்: Maram Ismail. தமிழில்: றேனுகா துரைசிங்கம்

  • ஆஸ்திரேலிய பெற்றோர் விசாக்களுக்காகக் காத்திருக்கும் 151,000 பேர்!

    06/09/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவிற்கு தங்கள் பெற்றோரை அழைத்து வர விரும்பும் புலம்பெயர்ந்த குடும்பங்களால் தாக்கல்செய்யப்பட்ட 151,590 க்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக காத்திருக்கின்றன.தங்கள் பெற்றோரை நிரந்தர விசாவில் இங்கே அழைத்துவர விரும்பும் ஒவ்வொரு நபரும் அதைச் செய்ய முடியாத நிலை உள்ளதாக குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் Julian Hill, SBS பஞ்சாபியிடம் தெரிவித்தார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    06/09/2024 Duration: 08min

    இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய கட்சிகளின் கொள்கை பிரகடனங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள்; இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு; தமிழ் பொது வேட்பாளரின் கொள்கைப் பிரகடனம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • “உங்கள் வங்கியிலிருந்து உங்களை அழைக்கிறோம்” என்று தொலைபேசி வந்தால் என்ன செய்வீர்கள்?

    06/09/2024 Duration: 12min

    நம்மைச் சுற்றி மோசடி வலைகள் விரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று வங்கியிலிருந்து நம்மை அழைப்பதாகக்கூறி நம்மை ஏமாற்றுவது. இப்படியான மோசடிகளில் நாம் சிக்காமலிருக்க சில யோசனைகளை முன்வைக்கிறார் இணைய பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகின்றவரும், இணைய மோசடி குறித்து முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டுவருபவருமான செந்தில் சிதம்பரநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  • "வட்டி வீதக் குறைப்புகளை எதிர்வரும் காலாண்டில் எதிர்பார்க்க முடியாது" - ரிசர்வ் வங்கி கவர்னர்

    06/09/2024 Duration: 04min

    செய்திகள்: 06 செப்டம்பர் 2024 வெள்ளிக்கிழமை வாசித்தவர்: செல்வி.

  • ஆஸ்திரேலியர்கள் ஏன் அதிகளவில் சூதாட்டங்களுக்கு அடிமையாகின்றனர்?

    05/09/2024 Duration: 08min

    ஆஸ்திரேலியர்கள் ஆண்டுக்கு $25 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சூதாட்டத்தில் இழக்கின்றனர். இது உலகலாவிய ரீதியில் மிகப்பெரிய இழப்பாக நோக்கப்படுகிறது. சூதாட்ட அடிமைத்தனத்தில் ஆஸ்திரேலியர்கள் முன்னணியில் திகழ்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் சிட்னியில் வசித்துவரும் சமூகசேவையாளர் கார்த்திகேயன் ராமநாதன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • யார் துறவி? நீங்கள் நினைப்பது தவறாக இருக்கலாம்!

    05/09/2024 Duration: 11min

    தமிழகம் நன்கறிந்த ஆளுமையான தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர். அவர் ஆஸ்திரேலியா வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்புக்கு “துறவு” எனும் தலைப்பில் வழங்கிய ஒலிக்கட்டுரை. தயாரிப்பு: றைசெல்.

  • ஆஸ்திரேலியாவில் கடந்த ஆறு மாதங்களில் 14,877 பேர் அகதி தஞ்சம் கோரி விண்ணப்பம்

    05/09/2024 Duration: 02min

    ஆஸ்திரேலியாவில் இவ்வருடம் ஜுலை வரையிலான 6 மாத காலப்பகுதியில் 14, 877 பேர் இங்கிருந்தபடி புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளதாக உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • 60 நாட்களுக்கு வாங்கும் மருந்துகளின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்தது!

    05/09/2024 Duration: 10min

    பார்மசி அல்லது மருந்தகங்கள் ஒரு நோயாளிக்கு மருந்துகளை 30 நாட்கள் மட்டுமே தருகின்ற முறையை மாற்றி, இனி 60 நாட்களுக்கு தரலாம் என்பதாக கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த அரசின் புதிய திட்டத்தின்கீழ் சுமார் 300 மருந்துகளை தாம் இணைத்திருப்பதாக அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. Civic Medical Centre, Pendlehill, NSW எனுமிடத்தில் மருத்துவ சேவை நிலையத்தை நிறுவி நிர்வகித்து வரும் Dr பரண் சிதம்பரகுமார் அவர்கள் விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • எதற்கும் கவலைப்படுபவரா நீங்கள்? ஆபத்து காத்திருக்கிறது!

    05/09/2024 Duration: 10min

    உளவியல் நோய்களில் ஒன்றான PTSD என்று அழைக்கப்படும் Post Traumatic Stress Disorder அதிர்ச்சிக்கு பின் ஏற்படுகின்ற மன அழுத்த கோளாறு பற்றி விளக்குகிறார் சிட்னியில் மனநல மருத்துவராக பணியாற்றும் திரு துரைரட்ணம் சிவரூபன். அவரோடு உரையாடுபவர் செல்வி.

  • வாடகை வீடுகளில் வாழ்கின்றவர்களுக்கு அதிக உரிமைகள் வழங்க அரசு யோசனை

    05/09/2024 Duration: 05min

    செய்திகள்: 5 செப்டம்பர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • உணர்வு ரீதியான துன்புறுத்தல் வளரும் பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கிறது?

    05/09/2024 Duration: 07min

    ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் முன்பை விட அதிகமாக உணர்வு ரீதியான துன்புறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இது குறித்து பாதி பேர் மட்டுமே அதிகாரிகளிடம் புகார் செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Omoh Bello எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.

  • மொபைல் போன்களை நீண்ட காலம் பயன்படுத்துவதால் மூளைப் புற்றுநோய் ஏற்படுமா?

    04/09/2024 Duration: 02min

    மொபைல் போன்களை நீண்ட காலம் பயன்படுத்துவதால் மூளைப் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்வி பல ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில் இதற்கான பதிலை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் எந்தத்துறையில் கல்வி கற்றால் அதிகம் சம்பாதிக்கலாம்?

    04/09/2024 Duration: 11min

    ஆஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை மேற்கொள்கின்ற மாணவர்கள் தமது கற்கை நெறியை தெரிவுசெய்யும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் உட்பட இன்னும் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் money mindset coach, எழுத்தாளர் மற்றும் mortgage broker என பன்முகம் கொண்ட ஒபு ராமராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  • மெல்பனில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்- கணவனே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

    04/09/2024 Duration: 06min

    மெல்பனில் இலங்கைப் பெண்ணொருவர் கத்தி மற்றும் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் அவரது முன்னாள் கணவர்தான் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தமிழக பேசுபொருள்: அதிமுக கரைந்துவிடுமா?

    04/09/2024 Duration: 08min

    தமிழ்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான அதிமுக கரைந்துவிடும் என்ற விமர்சனம் எழும் பின்னணியில் அதிமுக சந்திக்கும் சவால்கள் என்ன என்று விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • Recognising and intervening in domestic violence: Key approaches for support - குடும்ப வன்முறையை எப்படி அடையாளம் காண்பது? அறிகுறிகள் என்ன?

    04/09/2024 Duration: 14min

    Everyone agrees that domestic violence must be stopped everywhere; however, many lack a full understanding of what domestic violence entails and how to intervene in such situations. Mental Health Social Worker and Family Work Consultant, Runa, explains the signs of domestic violence and where individuals can seek help and support. Produced by RaySel. - குடும்ப வன்முறை தடுக்கப்படவேண்டும் என்ற ஒருமித்த கருத்து மக்கள் மத்தியில் இருந்தாலும், குடும்ப வன்முறை என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது பற்றிய சரியான புரிதல் இருப்பதில்லை. இந்த பின்னணியில் குடும்ப வன்முறை குறித்து விளக்குகிறார் மனநலம் சார்ந்து குடும்பங்களோடு பணியாற்றும் Social Worker ரூனா அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.

  • ஆஸ்திரேலிய வரலாற்றில் பெரிய அரசியல் கட்சிக்குத் தலைமை தாங்கும் முதல் பூர்வீகக் குடியினப் பெண்

    03/09/2024 Duration: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 04/09/2024) செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

page 17 from 25